
பெலீஸுக்கு செல்வதற்கான உள்ளூர் விமான சேவையான ட்ராப்பிக் எயர் விமானத்தில் பயணித்த 49 வயதான அமெரிக்க நபர் அகினியெலா சாவா டெய்லர், விமானத்துக்குள் பயணிகள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தினார். இந்த அதிர்ச்சிகர சம்பவம் கரோசல் (CZH) இலிருந்து பெலீஸ் சிட்டி (BZE) நோக்கி புறப்பட்ட விமானத்தில் நடந்து இருந்தது. இதை தொடர்ந்து, மற்றொரு பயணி தைரியமாக மையத்தில் குதித்து டெய்லரை சுட்டுக் கொன்றார். பெலீஸ் போலீஸ் கமிஷனர் சேஸ்டர் வில்லியம்ஸ், அந்த பயணியை “வீரர்” என பாராட்டினார்.
✈️⚠️ Mid-Air Scare Over Belize
A video shows the tense moment inside a light aircraft during a mid-air situation over Belize. The incident involved Tropic Air flight V3HIG, operating a routine domestic service from Corozal (CZH) to Belize City (BZE).
The aircraft, a Cessna 208B… https://t.co/RZ3xkqUimj pic.twitter.com/IrLPfT9h42
— AirNav Radar (@AirNavRadar) April 17, 2025
டெய்லர் விமானத்தில் ஹைஜாக் முயற்சி செய்து, மேலும் எரிபொருள் வேண்டும் என்றும், நாட்டைவிட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விமானம் வெற்றிகரமாக பெலீஸ் சிட்டியில் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், டெய்லர் விமானத்துக்குள் கத்தியை எவ்வாறு கொண்டு வந்தார் என்பது தெளிவாகாமல் இருக்கிறது. பெலீஸ் அதிகாரிகள் தற்போது அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பு கொண்டு விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
Plane hijacking in Belize ends with hero passenger shooting American hijacker dead as plane runs out of fuel on landing Commissioner of Police says. pic.twitter.com/YjIlwwGcUs
— Belize.com (@Belizean) April 17, 2025