பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 50 பயணிகளுடன் இண்டிகோ விமானம் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது. உத்திரபிரதேசம் லக்னோவின் வான்பரப்பில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது, அதில் பயணித்த சதீஷ் சந்திர பர்மன் (வயது 63) என்ற பயணி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இது குறித்து விமானிக்கு தகவல் கொடுத்ததையடுத்து விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நடுவானில் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.