கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் டி.ஜே. ஹள்ளி மற்றும் ராமமூர்த்தி நகர் சாலையில் 5 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அவர்கள் பைக்கில் சாகசம் செய்து கொண்டே ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் கையில் நீளமான கத்தியை காட்டி அதனை ரோட்டில் இழுத்துக் கொண்டே பைக் ஓட்டி சாகசம் செய்து ரீல்ஸ் எடுத்துக்கொண்டே சென்றுள்ளார். இதனை சாலையில் பயணித்த மற்றொரு பயணி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவி அரசியல் அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பதிவிட்டு பாஜக கட்சியினர்  கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்தப் பதிவில் பாஜக தெரிவித்ததாவது,”பிரியமான தற்செயலான உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா இந்த முறை என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லவா? அல்லது தவறுதலாக வாள் தூக்கி உள்ளனர் என்று சொல்லவா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து வீடியோ வைரல் ஆனதால் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக சாகசம் செய்த இளைஞர்களை கைது செய்துள்ளது. மேலும் காவல்துறை விசாரணையில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்கள் நயீம், அரஃபாத், ஷாஹில், நஞ்சமத், அத்னான் என்பது தெரியவந்தது. குற்றவாளிகள் சமூக வலைதள ரீல்ஸ்களுக்காக வீடியோ எடுத்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து இவர்கள் 5 பேரின் மீதும் பாரதிய சஞ்சிதா, ஆயுத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.