
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், சஞ்சீவியின் காரின் பின்புற கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் சஞ்சீவியின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, கெடிலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த திருநாவலூர் காவல்துறையிடம் சஞ்சீவி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ், ராஜா மற்றும் வினோத் ஆகிய மூவரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.