மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தின் கார்விர் தாலுகாவில் உள்ள காகல் சாலையில் அதிர்ச்சிகர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இரண்டு டிவைடர்களுக்கிடையில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஒரு டெம்போவுக்கு முன்னால் வந்தது. அந்த டெம்போவில் ஏராளமான இரும்புக் கம்பிகள் ஏற்றிய நிலையில் இருந்தது. திடீரென காரை கண்ட டெம்போ ஓட்டுநர் கடுமையாக பிரேக் அடித்த நிலையில், டெம்போ கட்டுப்பாட்டை இழந்தது.


இதனுடன், டெம்போவில் ஏற்றியிருந்த அனைத்து இரும்புக் கம்பிகளும் வேகமாக முன்னே சென்று, காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்தது. விபத்தின் இந்த கோரமான காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.