ஆக்ராவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் ஒரு பெண் தனது சிறிய வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஐந்து பேர் இரண்டு பைக்கில் வந்து அவரை தொந்தரவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், அந்த நபர்கள் பெண்ணை பின் தொடர்ந்து வந்து, அவரைத் தொட்டுப் பார்க்கவும், உதைக்கவும் முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் இவ்வாறு ஒரு பெண் துன்புறுத்தப்படும் போது யாரும் உதவ முன்வராதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து  விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பலரும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.