
அலிகரில் உள்ள கபானா டோல் பிளாசா அருகே, சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராம்ஜிலால் சுமனின் காரில் கர்னி சேனா மற்றும் க்ஷதிரிய மகாசபா உறுப்பினர்கள் டயர்களை வீசி தாக்குதல் நடத்தினர். சுமார் 50க்கும் மேற்பட்ட கர்னி சேனா உறுப்பினர்கள் சம்பவ இடத்தில் திரண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் வீசிய டயர்கள் காரணமாக சுமனின் ஊர்திப் பட்டாளத்தில் உள்ள பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்தன.
சம்பவத்தைப் பற்றி பேசும் போது, எம்.பி. ராம்ஜிலால் சுமன், “இது மிகவும் மோசமான சம்பவம். எங்கள் ஊர்தியை டோல் பிளாசாவிலேயே போலீசார் நிறுத்தினர். புலந்த்ஷஹரில் கடந்த சில நாட்களாக இதுபோன்று பல்வேறு அநீதி சம்பவங்கள் நிகழ்கின்றன. தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள், திருமணங்கள் தடுக்கப்படுகின்றன, பாபாசாகேப் அம்பேத்கரின் சிலைகள் உடைக்கப்படுகின்றன” என்றார். தாக்குதலுக்குப் பிறகு, அலிகர் போலீசார் அவரை ஹாத்ராஸ் எல்லை வரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
Aligarh, Uttar Pradesh: Karni Sena members attacked the convoy of Samajwadi Party MP Ramjilal Suman by throwing tyres at the vehicles, causing several cars in the high-speed convoy to collide and suffer damage. The incident took place near Khereshwar Chauraha on the highway pic.twitter.com/gIWfTysr0Y
— IANS (@ians_india) April 27, 2025
இந்த சம்பவத்திற்கு முன்னதாக, ராஜ்யசபாவில் ராணா சாங்காவை குறித்த சுமன் செய்த கருத்துக் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சுமனின் ஆகிராவிலுள்ள இல்லத்தையும் முந்தைய நாளில் தாக்கி சேதப்படுத்தியிருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு, உயிர் அபாயம் இருப்பதாகக் கூறி, சுமன் உயர் நீதிமன்றத்திற்கும், ராஜ்யசபா துணை சபாநாயகருக்கும் கடிதம் எழுதியுள்ளார். தற்போது அவரது இல்லத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்ந்து அலிகர் மற்றும் புலந்த்ஷஹர் பகுதிகளில் தீவிரமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் இருவரும் கடும் எதிர்வினை தெரிவித்துள்ளன.