தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெற்ற தந்தையை மகன் ஒருவர் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கன்னதந்திரி மொஹிலி என்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் சாய்குமார். இவர் தன்னுடைய தந்தையை நடுரோட்டில் வைத்து கிட்டத்தட்ட 32 முறை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் சாய்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தினமும் மது குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரை தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.