இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி 51 ரன்கள் வரை எடுத்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது மைதானத்திற்கு விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ஆன ராஜ்குமார் ஷர்மா என்பவர் வந்தார்.

 

அவரைப் பார்த்ததும் விராட் கோலி மரியாதையின் நிமித்தமாக அவரின் கால்களை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் வாங்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரராக திகழும் விராட் கோலி சிறு வயது பயிற்சியாளரை கண்டதும் காலில் விழுந்து மைதானத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரின் பண்பு பலராலும் பாராட்டப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.