தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகைகள் லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு வெளியாகும் நிலையில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் காலையிலேயே திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தி கோட் படம் வெற்றி அடைய நடிகர் விஜய்க்கு முதல் ஆளாக அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளதாக பதிவிட்டுள்ளார். அதோடு கோட் படத்தை அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்க்குமாறும் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்துள்ள நிலையில் அரசியல் களத்திற்குள் நுழைந்து வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர் அஜித் முதல் ஆளாக விஜய்க்கு வாழ்த்து சொன்னது கவனத்தை ஈர்த்துள்ளது.