
பிலடெல்பியாவில் ஒரு போலீஸ் அதிகாரி கேன் கோர்சோ நாயை சுட்டுக் கொன்றார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இந்தியாவில் நாய் தாக்குதல்களைக் கையாளும் காவல்துறையின் சட்ட நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் 53 வயதுடைய ஒருவரைக் 4 நாய்கள் கவ்வுவதை வீடியோவில் பார்க்கலாம்.
சம்பந்தப்பட்ட பகுதியில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்ததும் அப்பகுதியில் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணிக்காக நடத்தப்பட்டிருந்தார். அப்போது 53 வயது மதிக்கத்தக்க நபரை நாய்கள் சூழ்ந்து கடித்துக் குதறியது இதை கண்டதும் அதை அதிகாரி தடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் நாய்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால், அதில் ஒன்றை அதிகாரி சுட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அதிகாரி சரியான நெறிமுறையைப் பின்பற்றினாரா என்பது குறித்து நெட்டிசன்கள் தொடர்ச்சியாக தங்களது கேள்விகளை இணையதளத்தின் வாயிலாக எழுப்பி வருகின்றன.
https://x.com/i/status/1791094235334361387