உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் தாஸ்னாதேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தலைமை பூசாரி நரசிங்கனாந்த். இவர் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அதற்கு கண்டனம் தெரிவித்து அந்த கோவிலின் முன்பாக சுமார் 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தினர். ஏற்கனவே நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதால் பூசாரி மீது வழக்கு பதியப்பட்டது. இருப்பினும் அதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்ற நிலையில் 150 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தற்போது பாஜக கட்சியின் எம்எல்ஏ ஒருவர் போராட்டம் நடத்தியவர்களில் 10 முதல் 20 பேரையாவது சுட்டுக்கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது காசியாபாத்தில் லோனி தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் பாஜக எம்எல்ஏ நானந்த் கிஷோர் குர்ஜார். இவர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவது என்பது சனாதனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். அங்கு தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் மத்தியில் நடத்தி நாடகம் ஆடிவிட்டனர். மேலும் போராட்டம் நடத்தியவர்களில் குறைந்தது 20 பேரை ஆவது என்கவுண்டில் சுட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு இந்த துணிச்சல் வந்திருக்காது என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இடையில் ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.