
சென்னை மாவட்டம் கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட ஏழு மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது, நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனை தான் தொகுதி மறு வரையறை. இதற்காக கட்சி வேறுபாடுகளை கலைந்து போராடுவோம். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசிறமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன் எனக் கூறியுள்ளார்.