சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சூரிய மகன் 2025 என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் இயக்குனரும் நடிகருமான கரு பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் பேசிய இரண்டு அமைச்சர்களும் அரசின் சாதனைகளை மட்டும் தான் பேசினார்கள். அரசியல் பற்றி பேசவில்லை. இதுதான் மனிதனுக்கு கிடைக்கிற மிக சிறந்த பாராட்டு என்று நான் நினைக்கிறேன். திமுக ஆட்சியில் நூலகம் கட்டிய நிலையில் முதலில் சென்னையில் கட்டிய நூலகத்திற்கு அண்ணாவின் பெயரையும், மதுரையில் கட்டிய நூலகத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயரையும், கோவையில் பெரியார் பெயரையும் வைத்துள்ளனர். ஆனால் திருச்சியில் கட்டிய நூலகத்திற்கு எதற்காக காமராஜர் பெயர் வைக்க வேண்டும்.

ஏனெனில் விஜய் தன்னுடைய எதிரி திமுக தான் என்று கூறியுள்ளார். இதனை முதன் முதலாக கடந்த 1985 ஆம் ஆண்டு சட்டசபையில் காமராஜர் சொன்னார். அதாவது என்னுடைய முதல் எதிரி திமுக தான் என்று காமராஜர் கூறினார்.அப்போது யார் எதிரியாக நினைத்தார்களோ அவர்களின் பெயரையே வைத்து மகிழ்ந்த கட்சி தான் திமுக. கூட்டணி தொடர்பாக ரகசியமாக பேசி வைத்து சும்மா போயிட்டு வந்தோம் என்கிறார்கள். ஆனால் அமித்ஷா கூட்டணி பற்றி தான் பேசினோம் என்கிறார். நமக்கு இருக்கிற ஒரே ஒரு காமெடி என்றால் அது அண்ணாமலை மட்டும் தான். அவரை மட்டும் மாத்திடாதீங்க. மேலும் அந்தக் கட்டுல எல்லாருமே ஜோக்கர் தான் என்று கூறினார் ‌