
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரமாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் . ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் – ஹமாஸ் பகுதிகளில் வினோதமான நிகழ்வுகள் சில நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சினிமா பாணியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு இசை விழாவில் புகுந்து தீவிரவாதிகள் தாக்கியபோது, இரண்டு காதலர்கள் உயிரை காப்பாற்ற மறைந்து கொண்டனர்.
அவர்களின் மரணம் தவிர்க்க முடியாதது என்று நினைத்து ஒருவரையொருவர் கடைசியாக முத்தமிட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக அந்த காதல் ஜோடி உயிர் தப்பினர். இதனை தொடர்ந்து அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.