பாஜக கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ பன்னீர் செல்வத்திற்கு தமிழக முன்னேற்றக் கழக தலைவரும் தென்காசி தொகுதி வேட்பாளருமான ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தார் .  முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தது இருதரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரு புறம் இருக்க பாஜக கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிருக்கிறார்.  இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாக ஜான்பாண்டியன் ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அண்ணன் ஓபிஎஸ் என்ன சின்னத்தில் போட்டியிடுகிறார் தெரியுமா? பலாப்பழ சின்னம்.  பலாப்பழம் பார்த்திருக்கிறீர்களா நான் தான் பலாப்பழம். வெளியே பார்க்கத்தான் இப்படி இருப்பேன் . ஆனால் உள்ளுக்குள் அத்தனை இனிப்பாக இருப்பேன். ராமநாதபுரத்தில் தேவர்களும், தேவேந்திரர்களும் கலந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்றால் ஓபிஎஸ் அண்ணன் இங்கே வெற்றி பெற்று ஆக வேண்டும்.

அதனால் ஓபிஎஸ் அண்ணனுக்காக பிரச்சாரம் செய்கிறேன். நம்மை ஒற்றுமையாக இருக்க விடாமல் பிரித்து வைத்து அரசியல் செய்தது திமுகவும் அதிமுகவும் தான்.  இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ்யும், ஜான் பாண்டியனும் சேர்ந்து வந்துள்ளோம் . ராமநாதபுரம் எம்பி யாக இருந்த நவாஸ் கனியை தற்போது திமுக நிறுத்தி உள்ளது. அவர் போனமுறை எம் பியாக ஜெயித்த பொது இராமநாதபுரத்திற்கு ஏதாவது நல்லது செய்தாரா? தேவரையும் தேவேந்திரர்களையும் அவர் வீட்டுக்குள்ளேயே விடமாட்டான். நம்ம வீடுகளில் வந்து அவன் சாப்பிட மாட்டான். ஆனால் நம்ம தான் அவனிடம் ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்று பேசி உள்ளார்.