
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், கார் ரேசிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது படங்களில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக துபாய் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அங்கு அவர் தற்போது வெளி இடங்களுக்கு செல்லும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியாகி கொண்டு இருக்கிறது.
Actor And Racer #Ajith latest photo in cycling attire. pic.twitter.com/xfzLFcvUdE
— Muthirai (@MuthiraiTv) February 14, 2025
இந்நிலையில் அஜித் மிக ஒல்லியாக மாறியிருக்கும் ஸ்டில் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் சைக்கிளிங் செய்வதற்காக அணிந்திருக்கும் உடை தான் அது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித் இவ்வளவு ஒல்லியாக மாறிவிட்டார் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.