ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற எம்.எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் லக்னோ பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு சென்னை அணி களம் இறங்கிய நிலையில் 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கேப்டன் தோனி அபாரமாக விளையாடி 11 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என மொத்தம் 26 ரன்கள் எடுத்திருந்தார். அதோடு முன்னதாக ஸ்டம்பிங் மூலம் ஆயுஷ் பதோனியை அவுட்டாக்கினார். இந்த போட்டியில் நேற்று சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை விக்கெட் கீப்பராக ஸ்டெம்பிங் முறையில் 200 பேரை அவுட் ஆக்கிய முதல்விரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

இதே போன்று மற்றொரு முத்தான சாதனையையும் தோனி படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக வீரர்களை ரன் அவுட் ஆக்கிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதாவது நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் லக்னோ வீரர் அப்துல் சமதை ரன் அவுட் மூலம் தோனி அவுட் ஆக்கி வெளியேற்றினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 25 பேரை ரன் மூலம் அவுட் ஆக்கிய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். மேலும் இந்த பட்டியலில் சிஎஸ்கே அணியின் வீரர் ஜடேஜா 23 வீரர்களை ரன் அவுட் மூலம் அவுட் ஆக்கி இரண்டாம் இடத்திலும் ஆர்சிபி வீரர் விராட் கோலி 22 பேரை ரன் அவுட் மூலம் அவுட் ஆக்கியதில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் தோனி மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். அதாவது நேற்றைய தினம் நடந்த போட்டியில் தோனி ஆட்டநாயகன் விருதினை வென்றார். இதன் மூலம் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதாவது முதல்முறையாக 43 ஆண்டுகள் 281 நாட்கள் வயதில் ஆட்டநாயகன் விருதுநகர் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பாக அதிக வயதில் ஆட்டநாயகன் விருதினை வென்றவராக பிரவீன் தம்போ இருந்தார். இவர் 43 வயது 60 நாட்களில் ஆட்டநாயகன் விருதினை வென்றார். மேலும் இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்றவர் என்ற பெருமையை எம்.எஸ். தோனி பெற்றுள்ளார்.