கடந்த 2016 ஆம் வருடம் வெளியான “கிரிக் பார்ட்டி”என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சுல்தான் படத்தின் மூலமாக தமிழிலும், அனிமல் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் அறிமுகமானார். தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

இவர் சமீபத்தில் புஷ்பா-2 படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். புஷ்பா 2 படத்தில் இவர் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடிப்பதற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். முன்னதாக புஷ்பா படத்திற்கு வாங்கிய சம்பளம் 2 கோடி. மூன்றே வருடங்களில் தன்னுடைய சம்பளத்தை ஏழு கோடி வரை உயர்த்தி விட்டார். ராஷ்மிகாவிற்கு 10 கோடி கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். 28 வயதாகும் இவர் தற்போது 10 கோடி சம்பளம் வாங்குகிறார்.  நடிக்க வந்த ஒன்பது ஆண்டுகளில் 10 கோடி தொட்டுவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கு லேட்டாக நடந்தது ரஷ்மிகாவுக்கு சீக்கிரம் நடந்து விட்டது” என்று கூறி வருகிறார்கள்.