உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சுந்தர்பாடா பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்தி தன்னுடைய மனைவியை கொடூரமாக கொலை செய்து மூன்று நாட்களாக சடலத்தை வீட்டிற்குள் பதுக்கி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் தன்னுடைய மனைவியின் கை நரம்புகளை வெட்டியும் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார் .பின்னர் அவர் வீட்டிற்குள் மூன்று நாட்களாக சடலத்தை வைத்திருந்த நிலையில் சக்தியை அவருடைய அக்கா கீதா செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

 

ஆனால் தன் தங்கையை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த கீதா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு தன் தங்கையின் வீட்டிற்கு சென்றார். அப்போது போலீசாரும் வந்துவிட்டனர். அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது கீதாவின் சடலம் கிடைத்தது. அவருடைய சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் தலைமறைவாக உள்ள சக்தியை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் அவரை கைது செய்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.