கடலூர் மாவட்டத்தில் உள்ள நியூ சினிமா திரையரங்குக்கு நடிகர் சூரியின் “கருடன்” படம் பார்ப்பதற்காக நரிக்குறவர் இன மக்கள் சென்றுள்ளனர் . அப்பொழுது அவர்களுக்கு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து படம் பார்ப்பதற்கு அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தியேட்டருக்குள் நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து அரசு வாகனத்திலேயே அவர்களை படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு அழைத்து வந்து விட்டுள்ளார் வட்டாட்சியர் பலராமன். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.