
ஐபிஎல் 2025 தொடரின் 43-வது போட்டியில், சென்னை சேப்பாக்கில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் மோதிய போது, SRH உரிமையாளர் கவ்யா மாறன் தனது உணர்ச்சிமிக்க எதிர்வினையால் இணையத்தில் வைரலாகியுள்ளார். ஏப்ரல் 25 அன்று நடந்த இந்தப் போட்டியில், SRH வீரர் கமிந்து மெண்டிஸ் ஒரு முக்கியமான வாய்ப்பை வீணடித்த சம்பவத்தின் போது கவ்யா மாறனின் எதிர்வினை ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது.
SRH இன்னிங்ஸின் 16-வது ஓவரில், CSK பந்துவீச்சாளர் நூர் அக்மத் ஒரு நோபால் வீசியதால் கமிந்து மெண்டிஸுக்கு ஒரு ஃப்ரீ ஹிட் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் 15 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த மெண்டிஸ், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட பந்தில் அசட்டை குவிக்கும் நோக்கில் ஸ்விங் செய்தார். ஆனால், அவர் பந்தை தொட்டுகூட பார்க்கவில்லை; பந்து நேரடியாக விக்கெட்டுகீப்பரிடம் சென்றது. இதனால் அப்போச்சூன்றிய ஃப்ரீ ஹிட் வாய்ப்பு வீணாகியது.
Edge-of-the-seat drama! 😱🔥#NoorAhmad oversteps, but #KaminduMendis can’t cash in on the free hit! Tension through the roof! 😵💫
Watch the LIVE action ➡ https://t.co/uCvJbWec8a#IPLonJioStar 👉 #CSKvSRH | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/bWQlW9VEna
— Star Sports (@StarSportsIndia) April 25, 2025
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கேமரா கவ்யா எதிர்வினையைகேமரா படம் பிடித்தது. அதிர்ச்சி மற்றும் விரக்தி கலந்து காணப்பட்ட அவரது முகபாவனை ரசிகர்களை ஈர்த்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது ‘X’ பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்ததும், அது சமூக ஊடகங்களில் விரைந்து பரவியது. சிஎஸ்கே ரசிகர்கள் சிறிது நேரம் மகிழ்ந்தாலும், இந்த போட்டியின் சூடான தருணத்தில் கவ்யா மாறனின் உணர்ச்சி வெளிப்பாடு தான் அதிகம் பேசப்பட்டது