
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், காயங்களில் இருந்து மீண்டு வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பதிவைப் பகிர்ந்துள்ளார்.
டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கியது. டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் பண்டின் கார் சாலை நடுவில் உள்ள டிவைடரில் மீது மோதி தீப்பிடித்தது. ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் மற்றும் நர்சன் இடையே ரூர்க்கியில் உள்ள வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது பயங்கர கார் விபத்துக்குள்ளானது.
அதன்பிறகு மீட்கப்பட்ட பந்த் சாக்க்ஷம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நெற்றியில் இரண்டு வெட்டுக்கள் விழுந்தன மற்றும் அவரது வலது முழங்கால் தசைநார் கிழிந்தது, கணுக்கால், கால் மற்றும் முதுகில்சிராய்ப்பு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் 25 வயதான வீரர் பண்ட் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். அது மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அவரது அறைக்கு வெளியே அமர்ந்திருந்த அவரது பார்வையை படம் காட்டுகிறது. பண்ட் படத்தைப் பகிர்ந்து கொண்டு அதில், “வெளியே உட்கார்ந்து புதிய காற்றை சுவாசிப்பது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறது” என்று குறிப்பிட்டார்.. இந்த இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது. இந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் செய்த ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட, பலரும் சீக்கிரம் குணமடைந்து இந்திய அணிக்காக ஆடுவீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதனிடையே பண்ட் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருப்பார் என்றும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் திட்டமிடப்பட்ட 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பையை அவர் தவறவிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பந்த் கடைசியாக டிசம்பர் 22 அன்று பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடினார், இதில் மென் இன் ப்ளூ தொடரை 2-0 என வென்றது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்களைத் தக்க வைத்துக் கொண்டது.
Rishabh pant latest Instagram story, he is recovering rapidly ❤️❤️ pic.twitter.com/2Hj9VSmN82
— Isha Negi (@IshaaNegi17) February 7, 2023
Rishabh Pant feeling blessed as he shared a message via his Instagram story.
Get well soon champ, cricket is waiting for you!#CricTracker #RishabhPant #BCCI pic.twitter.com/lqn6QE2vzi
— CricTracker (@Cricketracker) February 7, 2023