
கடந்த 2011 ஆம் வருடம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படம் மூலமாக ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தில் இவர் முத்தக் காட்சியை நெருக்கமான காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு அந்த அளவுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யபாரதி “டின்னர் டேட் வித் லிட்டில் பிரதர்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.