சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை சுப்பிரமணிய முதலி தெருவில் ஏழு லேப் டெக்னீசியன்கள்  வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வழக்கம் போல இரண்டு பேர் வேலைக்கு சென்று விட்டனர். மீதமுள்ள ஐந்து பேர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் காற்றுக்காக கதவை பூட்டாமல் தூங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நள்ளிரவு நேரம் பொருட்கள் விழும் சத்தம் கேட்டதால் ஐந்து பேரும் எழுந்து பார்த்தனர். அப்போது சார்ஜ் போட்டிருந்த 5 செல்போன்களும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.