மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு தமிழ்நாட்டிற்கு வருகிறார். இன்று இரவு தமிழகம் வரும் அவர் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட முக்கிய நிர்வாகிகளும் அவரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே டெல்லி சென்று இபிஎஸ் உள்ளிடோர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினர்.

அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதனை அமித்ஷா உறுதிப்படுத்திவிட்டார். அதாவது கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடைபெறுகிறது என்று அவர் கூறிய நிலையில் இதுவரை அதிமுக உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் தமிழக சட்டசபைக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் முக்கிய நிர்வாகிகளை சென்னையில் இருக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.

இன்று அமித்ஷாவின் தமிழக வருகை பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள நிலையில் புதிய பாஜக தலைவர் மற்றும் அதிமுக பாஜக கூட்டணி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே அண்ணாமலை தான் தலைவர் பதவிக்கான ரேசில் இல்லை என்று கூறிவிட்டதால் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.