தாய்லாந்து நாட்டில்  மரணமடைந்தவர்களுக்காக கல்லறையில்  படம் திரையிடப்பட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது வடகிழக்கு தாய்லாந்தின் நகோன் ராட்சசிமா மாகாணத்தில் 2,800 கல்லறைகளைக் கொண்ட சீனக் கல்லறையில் Sawang Metta Thammasathan என்ற அறக்கட்டளை ஒன்று நள்ளிரவு நேரத்தில் கல்லறையில் படத்தை திரையிட்டுள்ளது.

மேலும், அங்கே நாற்காலிகள் போடப்பட்டு, உணவு, உடை என்று உயிரிழந்தவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்துள்ளார்கள். ஆவிகளுக்கு நல்ல பொழுதுபோக்கு வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்ததாக்க விளக்கமளித்துள்ளனர்.