விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தென்கரைப் பகுதியில் மாரீஸ்வரி (21) என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் மாரீஸ் வரியின் பெற்றோர் வீட்டுக்கு மறு வீட்டு விருந்துக்காக சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் சம்பவ நாளில் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்காக சென்றனர். அப்போது நள்ளிரவில் வாலிபர் விழித்துப் பார்த்தபோது அருகில் படுத்திருந்த மனைவியை காணவில்லை.

உடனடியாக அதிர்ச்சி அடைந்த வாலிபர் தன் மனைவியை வீடு முழுவதும் தேடினார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வாலிபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தன் மனைவி காணாமல் போன விஷயத்தில் தென்கரையைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்ற வாலிபர் மீது சந்தேகம் இருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு என்னுடன் போனில் பேசும்போது எதுவும் நடக்காதது போன்று மாரீஸ்வரி பேசினார். அவர் என்னுடைய எதிர்கால கனவுகளை சிதைத்து விட்டார் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான மாரீஸ்வரியை தேடி வருகிறார்கள்.