மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டி சென்ற இவன் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ, கார், பைக் போன்ற வாகனங்களின் மீது ஜேசிபி மூலம் மோதி வாகனங்களை சேதமடைய செய்துள்ளான்.

பொதுமக்கள் அனைவரும் அவனை துரத்தி சென்ற போதும் ஜேசிபி வாகனத்தை நிறுத்தாத அவன் சரக்கு வாகனத்தை ஜேசிபி மூலம் தள்ளி சென்று சாலை ஓரத்தில் உள்ள கடையில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியின் மீது மோத முயற்சி செய்துள்ளான். இவ்வாறு தொடர்ந்து வாகனங்களை சேத படுத்திய இந்த சிறுவன் இறுதியில் ஆட்டோக்கள் மீது மோதி ஜேசிபி வாகனத்தில் இருந்து இறங்கினான்.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் சிறுவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை  தொடர்ந்து காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணையில் சிறுவன் மதுபோதையில் ஜேசிபி வாகனத்தை இயக்கியதால் மற்ற வாகனங்களை சேதப்படுத்தியதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.