
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5 முதல் 150 வரை சுங்க கட்டணம் உயர்கிறது. கார், ஜீப், மற்றும் இலகுரக வாகனத்திற்கு (ஒருமுறை) கட்டணம் ₹110, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ₹165, இலகுரக வணிக வாகனத்திற்கு (ஒருமுறை) ₹200, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ₹300 என கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்று அச்சு கனரகவாகனம் ஒருமுறை ₹460, 24 மணி நேரத்தில் திரும்ப ₹685, மாதம் 50 முறை பயன்படுத்த ₹15,265, மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு ₹330. நான்கு அச்சு முதல் ஆறு அச்சு வரை கனரகவாகனம் ₹660, 24 மணி நேரத்தில் திரும்ப ₹985, மாதத்திற்கு 50 முறை பயன்படுத்த ₹21,940, மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு ₹330. 7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனம் ஒருமுறைக்கு ₹800 கட்டணம்.
கார், ஜீப், வேன், இலகுரக வாகனத்திற்கு ஒருமுறை ₹125, 24 மணி நேரத்தில் திரும்ப ₹185, மாதத்தில் 50 முறை பயன்படுத்த ₹4135, மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வணிக வாகனத்திற்கு ₹60. இலகுரக வணிக வாகனம்: ஒருமுறை ₹200, 24 மணி நேரத்தில் திரும்ப ₹300, மாதம் 50 முறை பயன்படுத்த ₹6,680, மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு ₹100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது