சென்னை மாநகர் முழுவதும் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. போலி நபர்கள் POLICE, PRESS போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில், மே 2 முதல் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. விதிகளை மீறுவோருக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

அரசு வாகனங்களை தவிர பிற வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டிலும், வாகனங்களின் பிற பகுதிகளிலும், ஸ்டிக்கர்கள், சின்னங்கள் போன்ற அடையாளங்களை இனி ஒட்டக்கூடாது என சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.