
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையம் அருகே உள்ள பகுதியில் பாலாஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சூருக்கு தனது சொந்த வேலையின் காரணமாக சென்றுள்ளார். இதையடுத்து வேலை முடிந்தவுடன் அவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவர் வடுகசாத்து ஏரிக்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கொலுசு சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி இருசக்கர வாகனத்தை நிறுத்தி சுற்றிப் பார்த்தபோது எதிரே பெண்ணின் உருவம் ஒன்று தோன்றியது.

இந்நிலையில் பாலாஜி பதற்றத்துடன் தன் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு செல்ல முயன்றார், அப்போது அந்த பெண்ணின் உருவம் அவரைப் பார்த்து வா என அழைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி இருசக்கர வாகனத்தை திருப்பி வந்த வழியில் திரும்ப சென்றுள்ளார். மேலும் பாலாஜி தனது செல்போனில் இதனை வீடியோ பதிவு செய்து, பின்பு அந்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.