திமுகவின் சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திருவள்ளூரில் நவம்பர் 5ஆம் தேதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மண்டலம், தென் மண்டலம், மேற்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலங்களை தொடர்ந்து சென்னை மண்டல கூட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.