வடஇந்தியாவில் ஒன்பது நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் பூஜைகள், விரதங்கள், இசை, நடன நிகழ்ச்சிகள், சைவ உணவுகள் என மக்கள் உற்சாகமாக ஈடுபடுகின்றனர்.

ஆனால் இந்த ஆண்டின் நவராத்திரி தொடக்கம் நாளே ஒரு குடும்பத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரத்தை சேர்ந்த 36 வயதான பிரியன்சா சோனி என்ற பெண், மாதவிடாய் காரணமாக பூஜை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது அவரது கணவர்  முகேஷ் சோனி “மாதவிடாய் இயற்கை ஒன்றே, இதனால் எந்த பூஜையும் தடை செய்யப்படவே கூடாது” என்று சமாதானம் கூறியுள்ளார்.  ஆன்மிக நம்பிக்கையை கடுமையாகக் கடைப்பிடித்திருந்த அவர், பூஜையில் பங்கேற்க முடியாமையே ஒரு பெரிய இழப்பாக உணர்ந்தார்.

இதனையடுத்து கணவர் கடைக்குச் சென்றிருந்தபோது, தனியாக இருந்த பிரியன்சா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி  பிரியன்சா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரியன்சாவை இழந்து 2 பிள்ளைகளும் பரிதவிக்கின்றனர்.