
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகவும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் நாகர்கோவில் மற்றும் தாம்பரம் சிறப்பு ரயில் சேவை தற்போது நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் நவம்பர் 3வது வாரம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் மற்றும் தாம்பரத்திற்கும், இதற்கு மறு நாட்களில் தாம்பரம் மற்றும் நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.