தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. 1986 ஆம் ஆண்டு ‘மைதிலி என்னை காதலி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திற்கே சிறந்த நடிகைக்காக ஃபிலிம் பேர்  விருதை வென்றார். அதன்பிறகு, அவர் நடித்த ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘பன்னீர் நதிகள்’, ‘கண்ணே கனியமுதே’ மற்றும் ‘உன்னை ஒன்று கேட்பேன்’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

அமலா, நாகர்ஜூனாவுடன் நடிக்கும்போது, அவர்களுக்கு இடையே உள்ள நெருக்கம் அதிகரித்தது. இதற்கிடையில், நாகர்ஜூனாவின் முதல் மனைவி லட்சுமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் விவாகரத்து பெற்றார். ஒரே வருடத்தில், அமலாவை காதலித்து, இரண்டாவது முறையாக நாகர்ஜூனா திருமணம் செய்தார்.

இந்த நிலையில் அமலா பற்றி குட்டி பத்மினி அளித்த பேட்டியில் சுவாரசியமான ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நாகர்ஜுனா திருமணத்திற்கு முன்பே அமலாவுக்கு ஒரு கண்டிஷன் போட்டாராம். நாகர்ஜுனாவுக்கு ஒல்லியாக இருந்தால் தான் பிடிக்கும் என்பதால் உன்னுடைய எடையை நீ ஏற்றக்கூடாது.

இப்போது எப்படி இருக்கிறாயோ அப்படியே மெயின்டன் செய்ய வேண்டும் என கூறிவிட்டாராம். அப்படி இல்லை என்றால் அது விவாகரத்தில் கூட முடியலாம் என பயம் காட்டியிருப்பார். இதனால் திருமணம் ஆகி 30 வருடங்கள் ஆன பிறகும் டயட், உடல் பயிற்சி என கஷ்டப்பட்டு தனது உடல் எடையை அமலா மெயின்டெய்ன் செய்து வருவதாக தெரிகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.