விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் நிலையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயத்தில் பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்கான காரணத்தை தற்போது அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ் பாலாஜி கூறியுள்ளார். பாமக பேசும் மது ஒழிப்பு பற்றி விசிகாவுக்கு நம்பிக்கை கிடையாது.

சாதி அரசியலால் ஏற்பட்டுள்ள அவப்பெயரை மறைப்பதற்காக பாமக மது ஒழிப்பு பற்றி பேசுகிறது. அதனால்தான் ஜாதியும் மற்றும் மதவாத கட்சிகளை நாங்கள் அழைக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு பற்றி பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நாங்கள் மது ஒழிப்பு விஷயத்தில் பிஎச்டி படித்துள்ளோம். ஆனால் திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி படிக்கிறார். மேலும் விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்தினால் நாங்கள் அதற்கு ஆதரவு கொடுப்போம் என்று கூறினார்.