
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியின் பயணம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ரஷ்யா இன்று குழந்தைகள் மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்த நிலையில் 170 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த துயரமான நாளில் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் உலகின் மிகப்பெரிய குற்றவாளியை கட்டி அணைப்பதை பார்க்கும்போது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி தோற்றதைப் போல் ஒரு ஏமாற்றத்தை தருகிறது என்று கூறியுள்ளார்.