இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு செல்லும் இந்தியர்கள் பலரும் தங்களுடைய பணி நிமித்த விசாவுக்காக 9 மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கால அவகாசத்தை குறைப்பதற்காக ஜெர்மனி அரசு ஒரு நல்ல முடிவை அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு உதவியுடன் இந்திய நிறுவனங்கள் ஜெர்மனி அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன்படி ஜெர்மனி வெளியுறவு துறை அமைச்சர் அன்னேலானா பியேர் பக் 9 மாதத்தில் இருந்து 2 வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது என உறுதி செய்துள்ளார். இதற்கான விசா வேகமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய திறன் வாய்ந்த பணியாளர்கள் மிக அவசரமாக தேவைப்படுகிறது என்றும் அதற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

அதன் பிறகு ஜெர்மனிக்கு 4 லட்சம் பேர் விசா தாமதத்தின் காரணமாக செல்ல இயலாமல் காத்திருக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது . மேலும் இந்த புதிய அறிவிப்பால் பயணிகள் தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்