
தொகுதி மறு சீரமைப்பில் தமிழகம் 8 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசிப்பதற்கு வருகின்ற மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இது தொடர்பாக 45 கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், பல போராட்டங்களை தனித்து தான் செய்து கொண்டிருக்கிறோம்.
தொகுதி மறு சீரமைப்பு குறித்த கருத்தை இப்போதுதான் பேசுகின்றார்கள். ஆனால் இந்த கருத்தை கடந்த 2003 ஆம் ஆண்டிலேயே அறிக்கை விட்டு இந்த கருத்திற்கு எதிராக பேசியிருக்கின்றேன். கட்சிகள் ஆட்சியின் கருத்தை நாங்கள் நம்ப போவதில்லை. நீண்ட காலமாக நாங்கள் நம்பி நம்பி ஏமாந்த கூட்டமாக உள்ளோம். அதனால் இதனையே கோரிக்கையாக வலியுறுத்தி நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.