
உலகக் கோப்பையை வென்ற பிறகு அவரது நாட்டிற்கு சென்ற பாட் கம்மின்ஸ்க்கு எதிர்பார்த்த வரவேற்பு அளிக்கப்படவில்லை..
இறுதிப் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து 6வது முறையாக உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இன்று காலை தனது நாட்டை அடைந்தார். ஆனால் உலகக் கோப்பை வென்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் அவரது வீட்டில் (ஆஸ்திரேலியா) மிகவும் அமைதியான முறையில் வரவேற்கப்பட்டார்.. நட்சத்திர வீரர்களை வரவேற்க ரசிகர்கள் யாரும் வரவில்லை. ஆஸ்திரேலியாவில் உள்ள விமான நிலையத்தில் கம்மின்ஸ் இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பையை வென்ற பிறகும் ஆஸ்திரேலிய அணியைப் பார்க்க ரசிகர்கள் யாரும் விமான நிலையத்துக்கு வராதது ஏன் என்ற சந்தேகத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.
அவரை வரவேற்க விமான நிலையத்தில் 3 முதல் 4 புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலக சாம்பியன் கேப்டனுக்கு அவரது சொந்த நாட்டில் இப்படி வரவேற்பு கிடைப்பதை நினைத்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பேட்ச் கம்மின்ஸ்நாட்டிற்கு வரும் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் விமான நிலையத்தில் காணப்பட்ட காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்தவித ஆரவாரம் இல்லாமல் ஆஸ்திரேலிய மக்கள் இருப்பதாகவும், கேப்டன் கம்மின்ஸ் கூட அவரே அவரது உடைமைகளையும் கொண்டு செல்கிறார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தால், ரோஹித் சர்மா மற்றும் பிற வீரர்களை இந்திய ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து வரவேற்றிருப்பார்கள் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆனால் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி இந்திய ரசிகர்களின் இதயத்தை உடைத்தது.
உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, அனைத்து ஆஸி நட்சத்திரங்களும் தாயகம் திரும்பவில்லை. 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுவதற்காக சில வீரர்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர். நாளை முதல் டி20 போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் 7 மணிக்கு நடக்கிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. டாஸ் இழந்து முதலில் பேட் செய்த இந்தியா 240 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
Ye Pat Cummins WC jeet ke Australia land kiya hai aur koi greet karne ke liye bhi nahi hai.
Hum jeet jaate to log apni flight miss kar ke players ke pairon mein lot log ke dance kar rahe hote…pic.twitter.com/VzR1AAEePB— Sushant Mehta (@SushantNMehta) November 22, 2023
Captain Pat Cummins has arrived in Australia. pic.twitter.com/hFIyDH0R6f
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 22, 2023
https://twitter.com/FarziCricketer/status/1727165069824602151