நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை. ஆனால் இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் 2024-25 நிதி ஆண்டு முடிவுக்கு வரக்கூடிய கடைசி நாள். இதனால் இன்றைய தினம் வழக்கம் போல் வங்கிகள் மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்கள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இன்று கணக்குகளை முடிக்கும் நோக்கத்தில் வங்கிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று ஆண்டு இறுதி நாளான இன்று வரி செலுத்துபவர்களுக்கு உதவுவதற்காக வருமானவரித்துறை அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ரசீதுகள்  மற்றும் நிதிகளை கையாளும் வங்கிகள் வழக்கமாக செயல்பட வேண்டியது அவசியம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்று வங்கிகள் மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்.