இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த தொடர்பான வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் புனேவில் தெருக்களில் ஒன்று கூடிய மக்கள் இந்திய கொடியை அசைத்தும், விசில் அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

 

இதேபோன்று ஹைதராபாத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இந்தியா இந்தியா என்று ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர்.

 

அதன்பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் மக்கள் அனைவரும் வான வேடிக்கைகளை வெடித்து இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர்.

 

இதே போன்று மும்பையில் பாரத் மாதா கி ஜே, ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் ஆகிய முழக்கங்களை எழுப்பி வெற்றியை கொண்டாடினார். மும்பை ஏர்போர்ட்டில் இசை வாத்தியங்கள் முழங்க ஆடிப்பாடி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதோடு வாழ்த்துக்கள் இந்தியா டீம் என்ற பேனரையும் கையில் இருந்திருந்தனர்.

 

இதேபோன்று கேரளாவில் ரசிகர்கள் ஒன்று கூறி ஆட்டம் பாட்டத்துடன் இந்தியாவ வெற்றியை கொண்டாடிய நிலையில், டெல்லியில் பட்டாசுகள் வெடித்தும் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை எழுப்பையும் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

 

மேலும் ஜம்மு காஷ்மீரில் தேசிய கொடியை கையில் எழுதி பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை எழுப்பி வெற்றியை கொண்டாடினார்.