கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நேற்று ஒரு நாள் முழுவதும் மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று ம் மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.