நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தனி அடையாள எண் வழங்கப்படும் என NMC அறிவித்துள்ளது. NMC சட்டத்தின் கீழ் மருத்துவ தகுதியை பெற்றவர்கள், NEXT தேர்வு மூலம் தகுதி பெற்றவர்கள், NM பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் EMRBயின் இணையதளம் வழியாக அடையாள எண்ணை பெற விண்ணப்பிக்கலாம். NMC வழங்கும் தனி எண் உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என கூறப்படுகிறது. மேலும் புதுப்பித்தல் விண்ணப்பம் காலாவதியாகும் 3 மாதங்களுக்கு முன் கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 NMCயின் கீழ் உள்ள நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியம் (EMRB) இதைப் பராமரிக்கும். இந்த பதிவேட்டில் பல்வேறு மாநில மருத்துவ கவுன்சில்களால் பராமரிக்கப்படும் அனைத்து மாநில பதிவேடுகள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும்.