மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் தற்போது மருத்துவமனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியுடன் 1 அல்லது 2 பார்வையாளர்கள் மட்டுமே தங்குவதற்கு மருத்துவமனைகள் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் பெண் பணியாளர்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ‌