மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் மாபெரும் நடத்தினர். அவர்கள் மழை, வெயில் மற்றும் கடும் குளிர் என பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் மோடி அரசுக்கு எதிராக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதன்படி மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக சம்யுக்தா கிஷான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

அதாவது வேளாண் விளைபொருட்களின் MSP உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பட்ஜெட்டில் விவசாயிகளை புறக்கணித்துள்ளதாக விவசாய சங்கங்கள் விமர்சித்துள்ளது. அதன்பிறகு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் 4 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக களம் காண இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.