நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது. அதன்படி ரூ‌.5858 கோடியை தேசிய பேரிடர் வெள்ள நிவாரண நிதியிலிருந்து 14 மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்திற்கு ரூ. 1036 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.1492 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அசாம் மாநிலத்திற்கு ரூ.716 கோடியும், கேரளாவுக்கு ரூ‌. 145 கோடியும், பீகாரருக்கு ரூ.655.60 கோடியும், குஜராத் மாநிலத்திற்கு‌ ரூ. 600 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ. 468 கோடியும், இமாச்சல் பிரதேசத்துக்கு ரூ. 189.20 கோடியும், மணிப்பூருக்கு ரூ. 50 கோடியும், திரிபுராவுக்கு ரூ. 25 கோடியும், சிக்கிம் மாநிலத்திற்கு ரூ‌.23.60 கோடியும், மிசோரம் மாநிலத்திற்கு ரூ. 21.60 கோடியும், நாகலாந்துக்கு ரூ. 19.20 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடத்தில் மட்டும் 21 மாநிலங்களுக்கு ஏற்கனவே 14,958 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.