இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு திருமணம் நடைபெற்றால் குழந்தை திருமணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு என்ற அமைப்பு ஒரு ஆய்வினை நடத்தியது. அதில் நாட்டில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 குழந்தைகள் குழந்தை திருமணத்திற்காக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஒரு நாளைக்கு குழந்தை திருமணம் தொடர்பாக 3 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வருடமும் 16 லட்சம் குழந்தை திருமணங்கள் நாட்டில் நடைபெறுகிறது. அதன்படி பார்த்தால் தினசரி 4400 குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது. மேலும் குழந்தை திருமணம் தொடர்பாக வெளியான ஆய்வு ரிப்போர்ட் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.