
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்ற மக்களவைக்கு 2009-ம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதில் அதிக அளவில் பா.ஜ.க-வின் ரமேஷ் சந்தப்பா ஜிகாஜிநாகி என்பவரது சொத்து மதிப்பே உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.1.18 கோடியாக இருந்தது. ஆனால் 2014 -ஆம் ஆண்டில் ரூ.8.94 கோடியாகவும் 2019 -ஆம் ஆண்டில் ரூ.50.41 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
இது ஒட்டு மொத்த அளவில் 4,181 சதவீதமாகும். மக்களவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணங்களின் வழியே இது தெரியவந்துள்ளது என அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் பிசாப்பூர் தொகுதி எம்.பி அடைவார் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மந்திரியாக கடந்த 2016 முதல் 2019 -ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அதேபோல் பா.ஜ.க-வின் மற்றொரு கர்நாடக எம்பியான பி.சி.மோகன் இந்த சொத்து உயர்வு பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இரண்டு கடந்த 2019 ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.5.37 கோடியாகவும் 2019 ஆம் ஆண்டில் ரூ.75.55 கோடியாகவும் அதிகரித்துள்ளது.